/* */

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி 5 முனை போட்டி

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பிரதான ஐந்து கட்சிகள் மற்றும் ஆறு சுயேச்சைகள் என 11 பேர் போட்டியிடுகின்றனர்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி 5 முனை போட்டி
X

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஐந்து பிரதான கட்சி வேட்பாளர்கள்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இறுதி செய்யப்பட்ட 13 வேட்பாளர்களில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் 11 வேட்பாளர்கள் தற்போது இறுதிச் செய்யப்பட்டுள்ளதால் ஐந்து முனை போட்டி உருவாகியுள்ளது.

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

அவ்வகையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கடந்த 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கி, 27 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, 28ம் தேதி வேட்பு மனு பரிசீலனை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இறுதியாக 13 வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணி வரை வேட்பு மனு வாபஸ் பெறலாம் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் , சுயேச்சை வேட்பாளர்களான மோகனசுந்தரம் , கார்த்திகேயன் என இருவர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதாக அளித்த கடிதத்தினை ஏற்று வேட்புமனு வாபஸ் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் :

கட்சி வேட்பாளர்கள்

திமுக - செல்வம்.

அஇஅதிமுக - ராஜசேகர்

பாமக - ஜோதிவெங்கடேசன்

நாம் தமிழர் - சந்தோஷ் குமார்

பகுஜன் சமாஜ் கட்சி - இளையராஜா

சுயேச்சைகள்

1. ரமேஷ் 2. இளங்கோவன் 3. சூர்யா

4. செல்வம் 5. நரேஷ்பாரதி

6. வெங்கடேசன்

என மொத்தம் 11 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாபஸ் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் தங்களின் பிரதான கட்சி வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டதால் மாற்று வேட்பாளராக மனு செய்த நிலையில் தாங்கள் விலகிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 March 2024 12:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...