/* */

விளையாட்டு பூங்காவில் பெயர்ப் பலகை எழுத்துகளை களவாடும் மர்ம‌நபர்கள் ?

காஞ்சிபுரம் மாநகராட்சி அண்ணா பொழுதுபோக்கு விளையாட்டு பூங்கா பெயர் பலகையில் எழுத்துக்கள் திருடு போகும் அவலம் நேர்ந்துள்ளது.

HIGHLIGHTS

kanchipuram corporation park
X

kanchipuram news today-அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா பெயர் பலகையில் உள்ள எழுத்துக்கள் மாயமாகியுள்ள காட்சி.

kanchipuram news today-காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி, அதன் நினைவாக காஞ்சிபுரத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, கடந்த திமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டில் இரண்டு கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மடம் தெரு அருகில் குழந்தைகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பேரறிஞர் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா கட்டப்பட்டது. அதனை, அன்றைய தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்துவைத்தார்.

கடந்த பத்து வருடங்களில் பூங்கா சரியான முறையில் பராமரிக்கப்படாததால் அதில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதம் மற்றும் நீர்வீழ்ச்சி, நடைபாதை உள்ளிட்டவை சிதிலமடைந்து அண்ணா சிலை உடைந்து காட்சியளித்தது.

kanchipuram news today-இது தொடர்பான செய்தி வெளியான சில நாட்களில் அண்ணாசிலை மட்டும் நிறுவப்பட்டு பெயர் பலகை சீரமைக்கப்படாத நிலையில் இருந்தது. மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா மோ அன்பரசன் அண்ணா நூற்றாண்டு பூங்காவை பார்வையிட்டு புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் காஞ்சிபுரம் பெருநகராட்சி பூங்காவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு பூங்கா முகப்பில் உள்ள பெயர் பலகை நீக்கப்பட்டு, புதிய பெயர் பலகை அமைக்கும் பணி தற்போது நடைபெற்றது. இந்நிலையில் புதியதாக அமைக்க பெயர் பலகையில் உள்ள எழுத்துகளை மர்ம நபர்கள் இரவில் களவாடி செல்கின்றனர்.

தற்போது பல எழுத்துக்கள் காணாமல் போயுள்ளதால் அதை நீக்கி வண்ணங்களில் பெயர் எழுத வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 2 Jun 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...