/* */

காஞ்சிபுரம் உள்ளாட்சி தேர்தல்: டிஜிட்டல் பிரசாரத்தில் அதிமுக தொண்டர்

காஞ்சிபுரம் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தொண்டர் ஒருவர் டிஜிட்டல் முறையில் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் உள்ளாட்சி தேர்தல்: டிஜிட்டல் பிரசாரத்தில் அதிமுக தொண்டர்
X

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பிரசாரம் செய்து வரும் அதிமுக தொண்டர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்திலுள்ள அதிமுக, திமுக , தேமுதிக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

வெற்றி பெற்றாக வேண்டும் ‌‌‌‌என திமுகவும் , சட்டமன்ற தேர்தலில் தோல்வியிலிருந்து மீண்டு வர ஊராட்சி பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவும் களத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இவர்களுக்கு ஆதரவாக இந்நாள் , முன்னாள் அமைச்சர்களும் திட்டமிடப்பட்டு ஆலோசனை வழங்கி , பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரையில் வேட்பாளர்களின் செலவு மிகக் குறைந்த அளவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதால் வேட்பாளர்கள் வாகன பிரச்சாரத்தை குறைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வாட்ஸ்அப் ட்டுவிட்டர் என பல சமூக வலை தளங்களின் மூலமாக ஆதரவை பெற முயற்சி செய்து வருகின்றனர்..

இந்நிலையில் அதிமுக தொண்டர் ஒருவர் காவல்துறையினர் , சாலை வியாபாரிகள் பயன்படுத்தி வரும் மெகாபோனில் பென்டிரைவ் மூலம் தனது கட்சி வேட்பாளர்களுக்கு தனி ஓருவராக‌ கூட்டம்‌ கூடும் இடங்களில் ஓலிபெருக்கியை ஒலிக்க செய்து நவீன விஞ்ஞான வளர்ச்சியினை தொழில் ரீதியாக பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆயிரம் ரூபாய் அடக்க விலையில் வேட்பாளரின் கவனத்தை மட்டுமில்லாமல் வாக்காளர்களையும் சற்று திரும்பி பார்க்க சொல்லுகிறது இந்த தொண்டரின் குரல்.


Updated On: 2 Oct 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு