/* */

நடைபயிற்சியா?: நடக்காத காரியம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கொரோனா காரணமாக இன்று மாலை முதல் நடைப் பயிற்சி மேற்கொள்ள தடை

HIGHLIGHTS

நடைபயிற்சியா?: நடக்காத காரியம்
X

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காஞ்சி நகரின் பிரதான பகுதியில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம்.

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் முழுவதும் மரங்கள் உள்ளதாலும் , காவல் பயிற்சி அரங்கம் பெரிய அளவில் அமைந்துள்ளதால் அமைந்துள்ளதால் இயற்கையான சூழலுடன் , சுத்தமான காற்றுடன் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகம்பேர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று திடீரென கொரோனா பரவல் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும் , மைதானத்தில் விளையாடவும் திடீர் தடை விதிக்கப்பட்டதால் நடைபயிற்சி மேற்கொள்ள வந்த அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதில் சிலர் அங்கிருந்த காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில நடை பயிற்சியாளர்கள் கேட்டை மூடினால், கொரோனா போய்விடுமா என கேள்வி‌ எழுப்பியவாறே சென்றனர்.

தற்போதைய காலகட்டத்திற்கு நடைப்பயிற்சியால் உடல் வலிமை மற்றும் சுத்தமான காற்றை சுவாசிப்பதால் உடல் நிலை சீராக இருக்கும் என எண்ணி வந்த அனைவருக்குமே ஏமாற்றமே மிஞ்சியது..

Updated On: 4 May 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.