/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 239 பள்ளிகள் திறக்கப்படுகிறது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 239 பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். அருள்செல்வன் தகவல்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 239 பள்ளிகள் திறக்கப்படுகிறது
X

காஞ்சிபுரம் சி.எஸ்.எம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி திறக்க இறுதிக்கட்ட பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்

தமிழகத்தில் நாளை 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 239 பள்ளிகளில் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. அரசு மற்றும் சுயநிதி , அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள் என 63 மேல்நிலைப் பள்ளிகளும் 63 உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளது. இதேபோல் 16 உயர்நிலைப் பள்ளிகளும் 44 மேல்நிலைப் பள்ளிகளும் மெட்ரிக் பள்ளிகள் ஆக உள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளைப் பொறுத்தவரை 17 உயர்நிலைப் பள்ளிகளும் 35 மேல்நிலைப் பள்ளிகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை முதல் திறக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளை சுத்தம் செய்தல், கழிவறை, குடிநீர் தொட்டி சுத்தம் செய்தல் போன்ற இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

மாவட்டத்திலுள்ள 7095 ஆசிரியர்களில் 6 ஆயிரத்து 520 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளாதாகவும் , 86 சதவீதம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வன் தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி எடுத்துக்கொண்டே சான்றிதழ் எடுத்துக் கொண்டு வர வேண்டுமென ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் அதற்கான மருத்துவ சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்

Updated On: 31 Aug 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?