/* */

ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் :அன்னதானம், கண்தானம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் சார்பில் அன்னதானம் , கண்தானம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம்  :அன்னதானம், கண்தானம்
X
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட முழுவதும் அதிமுகவினர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், இரும்புப் பெண்மணி , அம்மா என தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஜெ. ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் மற்றும் அமைப்பு செயலாளரும், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , திருவள்ளூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் கணேசன் தலைமையில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் வாலாஜாபாத் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் திரு உருவப் படத்தை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வகையான பழங்கள் சமர்ப்பிக்கப்பட்டு தீபம் ஏற்றி நினைவஞ்சலி அனுசரித்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த ஏரிக்கரை பகுதியில் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் தலைமையிலும் , முன்னாள் டான்சில் தலைவர் ஆர் டி சேகர் தலைமையில் மேட்டு தெருவிலும் , மாவட்ட செயலாளர் சோமசந்தரம் தலைமையில் பேருந்து நிலையம் அருகேயும் , காஞ்சிபுரம் டவுன் வங்கி தலைவர் பாலாஜி தலைமையில் நெல்லுக்காரதெருவிலும்‌, கே எஸ் சோமசுந்தரம் மற்றும் வள்ளிநாயகம் தலைமையில் பெரியார் தூன் அருகே திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி தொண்டர்கள் தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொண்டர்கள் கண்தானம் படிவத்தினை பூர்த்தி செய்து சான்றிதழ்களை பெற்றனர்.

மேலும் நகர செயலாளர் ஸ்டாலின் தலைமையில் தேரடி , வாலாஜாபாத் எம்ஜிஆர் சிலை அருகே கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு அன்னதானம் நடைபெற்றது ‌.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Dec 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...