/* */

தமிழகத்தில் கொரோனா இறப்பு மறைக்கப்படுகிறதா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

கொரரோனா இறப்புக்களை அரசு ஒருபோதும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் கொரோனா இறப்பு மறைக்கப்படுகிறதா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்
X

கொரோனா தொற்று பாதித்து, காஞ்சிபுரத்தில் சிகிச்சை பெற்று வரும், தனியார் காப்பக குழந்தைகளின் உடல்நலனை, அமைச்சர் சுப்ரமணியம் நேரில் சென்று விசாரித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள 43 பேருக்கு, கொரோனா தொற்று காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 36 குழந்தைகள் உள்ள நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், இன்று காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.

பின்னர், பாதுகாப்பு கவச உடை அணிந்து, மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் ஆர்த்தி மற்றும் மருத்துவமனை இணை இயக்குனர் உள்ளிட்டோருடன், குழந்தைகள் சிகிச்சை பெறும் பகுதிக்கு சென்று நேரில் குறைகளை கேட்டறிந்து, தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்ரமணியம் கூறியதாவது: தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி, தொற்று பரவலை குறைத்து வருகிறது. கொரோனா இறப்புகளை, ஒரு போதும் அரசு மறைக்க முயலவில்லை. இதனால் அரசுக்கு எந்தவித லாபமும் இல்லை.

பெற்றோர்களை இழந்து வாடும் சிறுவர்களுக்கு மட்டுமே நிதி உதவி; கொரோனாவில் இறந்த அனைவருக்கும் அல்ல. எனவே, இறப்பை மறைப்பதில் அரசுக்கு உடன்பாடு இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் மருத்துவத்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை என எதுவாகிலும் கொரோனா இழப்புகளை மறைக்கக்கூடாது என்ரு, வெளிப்படையாக கூறி வருகிறோம் என்றார்.

ஆய்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Updated On: 28 Jun 2021 12:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான கேரள பாசிப்பருப்பு பிரதமன் சமைச்சு பாருங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    தாவர உண்ணி பிராணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன்?
  3. ஆன்மீகம்
    ஓம் என்ற மந்திர உச்சரிப்பு... பிரபஞ்ச சக்தியை நம்முள் ஈர்க்கும் ஒரு...
  4. லைஃப்ஸ்டைல்
    உடல் எடையை குறைக்கும் சுவையான கொள்ளு குழம்பு செய்வது எப்படி?
  5. வீடியோ
    🔴 LIVE : அதிமுகவால் Savukku Shankar உயிருக்கு அச்சுறுத்தல் | திருச்சி...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் வைகாசி பவுர்ணமி சிறப்பு வழிபாடு
  8. விளையாட்டு
    கரூரில் ஆண், பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி துவக்கம்
  9. கரூர்
    ஜூன் 8-ம் தேதி கரூரில் கூடுகிறது தேசிய மக்கள் நீதிமன்றம்
  10. வீடியோ
    இப்படியெல்லாம் பாடம் எடுக்க முடியுமா? | உ.பி பள்ளிகல்வித்துறை அசத்தல்!...