/* */

குன்றத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி

மாணவர்கள் கல்வி கற்க ஏதுவாக 5பாட பிரிவுகள் துவங்கவுள்ளதாகவும் , தகுதி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குன்றத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி
X

குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த தா.மோ.அன்பரசன் மற்றும் எம்எல்ஏ செல்வபெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மணோகரன் .

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இன்று காணொளி காட்சி வழியாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்போது தற்காலிகமாக குன்றத்தூர் சேக்கிழார் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் துவக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கினார்.

விழாவில் பேசிய அமைச்சர், பிற்படுத்தட்ட வகுப்பினர்கள் அதிகளவில் வசிக்கும் சட்டமன்ற தொகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கபட்டதால் மாணவர்கள் உள்ளிட்ட பலர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் கல்வி கற்க ஏதுவாக 5பாடவிரிவுகள் துவங்கவுள்ளதாகவும் , தகுதி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தற்காலிகமாக இக்கல்லூரி பள்ளி வளாகத்தில் நடைபெறும் எனவும் அடுத்த ஆண்டுக்குள் புதிய இடத்தில் கல்லூரிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 7 July 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!