/* */

பரிதாபம் : காலை முதல் மாலை வரை காத்திருந்த மாற்றுத் திறனாளிகள்..!

சமூகநலத் துறை அமைச்சரிடம் இருந்து நலத்திட்ட உதவிகளை பெற காலை பத்து மணியில் இருந்து மாலை வரை காத்திருந்த மாற்றுத் திறனாளிகள்

HIGHLIGHTS

பரிதாபம் : காலை முதல் மாலை வரை காத்திருந்த மாற்றுத் திறனாளிகள்..!
X

காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள்.

காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மாற்று திறனாளி நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்குதல், மாற்று திறனாளிக்கு இரு சக்கர வாகனம் வழங்குதல், தையல் இயந்திரம் என நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொள்ளும் விழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாலை 4மணிக்கு நடைபெறும் என அறிவிக்கபட்டது.

இதற்காக பயனாளிகளை காலை 10 மணிக்கே அரசு அலுவலர்கள் வர கூறியதால் அவர்களும் விழா அரங்கம் வந்தனர். சில பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்க தொடங்கியதும் அலுவலர்கள் அவர்களை அங்கிருந்து சென்று விடுமாறு மதியம் 2 மணிக்கு வருமாறும் கூறி அனுப்பினர்.

பயனாளிகளை திருப்பி சென்று வர முடியாது என கூறி அங்கு இருந்த அலுவலக வளாகங்களில் அமர்ந்து மதிய உணவை, பொழுதைக் கழித்து வந்த நிலையில் மாலை 3 மணி அளவில் அனைவரையும் அரங்கில் அமர வைக்கும் பணி தொடங்கியது.

இன்று சட்டப்பேரவை கூட்டம் என்பதால் அமைச்சர்களுக்கு வருகை தாமதம் என கூறி 5 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் மீண்டும் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து காலை 10 மணியில் இருந்தே வளாகத்தில் அமர்ந்து இருப்பதால் பயணிகள் மிகுந்த சோகத்துடன் காணப்படுகின்றன.

இதில் மாற்றுத்திறனாளிகளும் இருசக்கர வாகன அருகே அமைக்கப்பட்ட பந்தலிலேயே பல மணி நேரம் காத்து கிடக்கும் அவலம் உருவாகியுள்ளது.

இச்செயல் குறித்து பேசக்கூட தயங்கும் பயனாளிகள் கடந்த ஆட்சி தான் இது போன்று இருந்தது என்றாலும் தற்போது சட்டமன்றம் நடைபெறும் எனத் தெரிந்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அந்தந்த வட்டார அளவில் அலுவல்களில் நடத்தியிருக்கலாம் என உடன் வந்த உறவினர்கள் வருத்ததுடன் கூறினார்கள்.

Updated On: 24 Jun 2021 1:35 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  9. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்