/* */

திறந்தாச்சு மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்.. பொதுமக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலத்திற்கும் இன்று அலுவலகங்கள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் பிறப்பு , இறப்பு சான்றிதழ்கள் பெற மாநகராட்சிக்கு செல்லும் நிலை தவிர்க்கப்படும்.

HIGHLIGHTS

திறந்தாச்சு மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்.. பொதுமக்கள் மகிழ்ச்சி
X

காஞ்சிபுரம் மாநகராட்சி நான்காவது மண்டல குழு அலுவலக திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் எழிலரசன் மற்றும் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், நான்காவது மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன்.

ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கபட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி நான்கு மண்டல அலுவலகங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.

காஞ்சிபுரம் பெருநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. மேலும் பொது மக்களின் வசதிக்காகவும், நிர்வாக எளிமைக்காகவும், 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தந்த பகுதிக்கு மண்டல அலுவலகங்கள் அமைக்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு, ஏற்கனவே மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்த கட்டிடங்களை சுமார் 12 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது.

அதை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் இன்று மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் ஆகியோர் இணைந்து அலுவலகங்களை துவக்கி வைத்தனர்.

இந்த அலுவலகத்தில் மண்டல குழு தலைவரின் உதவியாளர், தட்டச்சர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் மூவர் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளபடும்.

இந்த மண்டல அலுவலகங்களில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் விண்ணப்பிப்பது, வார்டு பகுதி குறைகள் உள்ளிட்டவைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். இதன் மூலம் பகுதி மக்கள் தங்கள் தேவைகள் குறித்து தெரிவித்தால் அதனை மாமன்ற உறுப்பினர்கள் மண்டலக்குழு தலைவர்கள் மேயரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பணிகள் திட்டமிட்டு தேவைகள் அறிந்து மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளிலே இதனை பயன்படுத்தி கொண்டால் மாநகராட்சிக்கு செல்ல வேண்டிய குறைகள் வெகுவாக குறையும். மண்டல குழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினரை சந்திக்க நேராவிட்டாலும் அங்குள்ள அலுவலக உதவியாளரிடம் குறைகளை தெரிவித்தால் உடனடியாக தீர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டல அலுவலக திறப்பு விழாவில் துணை மேயர் குமரகுருநாதன், மண்டல குழு தலைவர்கள் சசிகலா, சந்துரு, சாந்தி சீனிவாசன், செவிலிமேடு மோகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பொறியாளர் கணேசன் , உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Aug 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு