/* */

எஸ்.பி. அலுவலக நுழைவு வாயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு டிஜிட்டல் பதாகை

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக நுழைவுவாயில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு டிஜிட்டல் பதாகை நிறுவப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

எஸ்.பி. அலுவலக நுழைவு வாயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த  விழிப்புணர்வு  டிஜிட்டல் பதாகை
X

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி உடற்பயிற்சி மேற்கொள்ளுகின்றனர். இதுமட்டுமில்லாமல் அரசு வேலை நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் பணி காரணமாக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு செய்ய மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்துள்ளது. மேலும் காஞ்சி மண்டல காவல்துறை துணைத் தலைவர் சத்யபிரியா ஆலோசனையின் படி, மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் எஸ்.பி அலுவலக நுழைவு வாயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த டிஜிட்டல் பாதாகை நிறுவியுள்ளார் .

இதில் முக கவசம் அணிதல் , தனிமனித இடைவெளி உள்ளிட்ட விழிப்புணர்வு தரும் விளம்பரங்கள் டிஜிட்டல் முறையில் ஓளிபரப்பி வருகின்றனர். இச்செயலை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

Updated On: 26 Jun 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...