/* */

மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு கோயிலில் புத்தாடை வழங்கி வாழ்த்து

Today Kanchipuram News -குமரக்கோட்டம் பாலசுப்பிரமணியசாமி திருக்கோயிலில் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு புத்தாடை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு கோயிலில் புத்தாடை வழங்கி வாழ்த்து
X

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயிலில் நடைபெற்ற திருமணத்தில்  மாற்றுத்திறனாளி மணமகளுக்கு புத்தாடை,  பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

Today Kanchipuram News -தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருக்கோயில்களில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளின் திருமணத்திற்கு மணமக்களுக்கு புத்தாடைகள் அந்தந்த திருக்கோயில் சார்பாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த 2021-2022 சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவித்தார்.

மேலும் 2022 - 2023 ஆண்டின் வரவு செலவு கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது, மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

மேலும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் திருக்கோயில்களில் திருமணம் செய்திட கட்டணமில்லா திருமணத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 08.12.2021 அன்று தொடங்கி வைத்து மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களுடன் பரிசு பொருட்களை வழங்கிச் சிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து, சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் மாற்று திறனாளி திருமணத்திற்கு மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் திருமணம் நடைபெற்றது.

இத்திட்டத்தினை செயல்படுத்த தேவையான நிதியினை திருக்கோயில் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யவும் திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் குமரகோட்டம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் , கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மணமகள் கிருத்திகா என்பவருக்கும் , காஞ்சிபுரம், ஓரிக்கை அண்ணா குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொறியாளர் மாசிலாமணி என்பவருக்கும் காலை திருக்கோயிலில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட இந்து சமய அறநிலை துறை சார்பில் இணை ஆணையர் இரா .வான்மதி, செயல் அலுவலர் தியாகராஜன் , ஆய்வர் கிருத்திகா மணமக்களுக்கு புத்தாடைகள் மற்றும் கோயில் பிரசாதங்கள் ஆகியவைகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மணமக்களுக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் மணமக்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதங்கள் திருக்கோயில் சார்பாக வழங்கப்பட்டது. மேலும் திருக்கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் திருமணம் நடைபெற்றதற்கான சான்றிதழையும் எம்.எல்.ஏ. எழிலரசன் மூலம் அவர்களுக்கு வழங்கினார்.

கந்த சஷ்டி விழா நடைபெறுவதால் ஏராளமான கோயிலை வலம் வரும் நிலையில் இந்த திருமண விழா நடைபெற்றதும் பலர் திருமணம் குறித்து அறிந்து நேரில் வந்து மணமக்களை வாழ்த்திய நிகழ்வு மணமக்களுக்கு நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின் மணமக்கள் குமரக்கோட்ட திருக்கோயிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவில் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து அர்ச்சனை பிரசாதங்களை பெற்று சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஏகாம்பரநாதர் திருக்கோயில் செயல் அலுவலர் வேதமூர்த்தி, தி.மு.க. பகுதி செயலாளர் சந்துரு, திலகர், வெங்கடேசன் , இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மணமகன் மணமகள் வீட்டார் என பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Oct 2022 10:20 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு