/* */

காஞ்சிபுரம் அருகே சுவர் இடிந்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த காஞ்சிபுரம் அடுத்த சிறு காவேரிபாக்கத்தை சேர்ந்த மாணவர் சுதர்சன் உயிரிழந்தார்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே சுவர் இடிந்து கல்லூரி மாணவன்  உயிரிழப்பு
X

காஞ்சிபுரம் அடுத்த சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலியான கல்லூரி மாணவன் சுதர்சன்.

காஞ்சிபுரம் அருகே உள்ள சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் டிரைவராக பணியாற்றி வருகின்றார். இவரது மூத்த மகன் சுதர்சன் அங்குள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில் அவர்களது பழைய ஓட்டு வீட்டை இடித்து புதுப்பிப்பதற்காக ஓட்டு வீட்டின் சுவரின் அடிப்பக்கத்தில் சுதர்சன் இடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுவர் அவர் மீது இடிந்து விழுந்தது. இதில் சுதர்சன் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலுசெட்டி காவல்துறையினர் உயிரிழந்த கல்லூரி மாணவன் சுதர்சனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த கல்லூரி மாணவன் தாய் சரஸ்வதி விவசாயம் செய்து வருகின்றார். சுதர்சனுக்கு சூர்யா மற்றும் சுதாகர் என இரண்டு தம்பிகள் உள்ளனர்.

வீட்டின் சுவர் இடிந்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

Updated On: 6 Aug 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  3. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  4. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  5. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  6. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  7. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  8. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  9. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  10. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...