/* */

பள்ளிகளில் பயன்பாடு இல்லா குடிநீர் தொட்டிகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு

கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலவாக்கம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.

HIGHLIGHTS

பள்ளிகளில் பயன்பாடு இல்லா குடிநீர் தொட்டிகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு
X

சர்ச்சைக்குள் ஆன குடிநீர் தொட்டியை ஆய்வு செய்த ஆட்சியர் கலைச்செல்வி.( கோப்பு படம்)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள குடிநீர் தொட்டிகளை அகற்றி‌ அதற்கான புகைப்படங்களை அனுப்பி வைக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இன்று ஊராட்சி துறை சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையில்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளிகளில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி பள்ளி கழிவறைகள் தூய்மையாக பராமரிப்பதை உறுதி செய்திடவும் மற்றும் பயன்படற்று உள்ள குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்து இடித்து அகற்றம் செய்து 28.11.23 க்குள் புகைப்படத்துடன் அறிக்கையாக தொகுத்து வழங்கிட சம்பந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களை பொறுப்பாக்கப்படுகிறது.

மேற்படி கிராம ஊராட்சிகளில் ஆய்வின் போது பயன்பாட்டற்ற நிலையில் உள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் கழிவறைகளை கண்டறிய பட்டி சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலவாக்கம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்த சர்ச்சையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Nov 2023 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  8. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
  9. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு