பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை

பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
X

என்.ஐ.ஏ. சோதனை

ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக இருந்து வரும் இரண்டு மருத்துவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கர்நாடக மாநில தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், சென்னையிலிருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை காவல் துறையினர் துணையுடன் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் இக்பால், நயின் சாதிக் ஆகிய இருவரும் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வருகின்றனர். இதில் நயின் சாதிக் இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்துள்ள நிலையில், ஜாபர் இக்பால் இரண்டாவது ஆண்டாக பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை இவர்கள் தங்கியுள்ள இல்லங்களுக்கு சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினர். கோவை போலீசார் உதவியுடன் சாய்பாபா காலனியில் சுப்பண்ண கவுண்டர் வீதி, நாராயண வீதி ஆகிய இடங்களில் சோதனை நடத்திய தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஒரு மணி சோதனைக்கு பின்னர் அங்கிருந்து கிளம்பினர்.

தனியார் மருத்துவமனையிலும் இருவர் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி சென்றனர். பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!