/* */

கோடை வெயிலை சமாளிக்க பாலாறு உபரிநீரில் சிறுவர்கள் ஆனந்த குளியல்

தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக பாலாற்றில் சிறுவர்கள் கோடை வெயிலை சமாளிக்க ஆனந்த குளியலிட்டனர்.

HIGHLIGHTS

கோடை வெயிலை சமாளிக்க பாலாறு உபரிநீரில்  சிறுவர்கள் ஆனந்த குளியல்
X

காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான பெரும்பாக்கம் பாலாற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ள நிலையில் ஆனந்தமாக குதித்து விளையாடும் சிறுவர்கள்.

தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக வாணியம்பாடி அடுத்த புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆந்திரா தடுப்பணை நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் , வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் கடந்த சில தினங்களாக கன கனமழை பெய்தது.இதன் காரணமாக பாலாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள கிளை ஆறுகளிலிருந்து மழை வெள்ளம் பெருக்கெடுத்தது

இந்த உபரிநீரானது வானியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக வழியாக தற்போது காஞ்சிபுரம் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பெரும்பாக்கம் பகுதியில் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

பெரும்பாக்கம் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். கோடை காலத்திலும் பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

வெள்ள பெருக்கு காரணமாக ஏற்கனவே பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விரைவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Updated On: 21 May 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...