/* */

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பகுதி சபை கூட்டத்தை தி.மு.க. புறக்கணிப்பு

Grama Sabha in Tamil -காஞ்சிபுரம் மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர் நடத்திய பகுதி சபை கூட்டத்தை தி.மு.க. வினர் புறக்கணித்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பகுதி சபை  கூட்டத்தை  தி.மு.க. புறக்கணிப்பு
X

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 41 வது வார்டு பகுதியில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் கலந்து கொண்ட  பொதுமக்கள்

Grama Sabha in Tamil -தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தினமான நவம்பர் முதல் தேதி அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் , கலைஞர் வீடு வழங்கும் திட்டம் , ஜல் ஜீவன் திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் தூய்மை பணியாளர் மகளிர் சுய உதவி குழுக்களை பாராட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற அறிவுறுத்தப்பட்டு கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி , குன்றத்தூர் , மாங்காடு , வாலாஜாபாத் , உத்திரமேரூர் , ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சிகளிலும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

குறுகிய காலத்தில் இவர்களுக்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் வரும் நான்காம் தேதிக்குள் அனைத்து பகுதிகளிலும் பகுதி சபை கூட்டங்கள் நடத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் உள்ள 51 மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டங்கள் நடத்த அந்தந்த மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட குழு நடத்தப்பட வேண்டும் என மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறிவுறுத்தி இருந்தார்.

அவ்வகையில் நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பாக 18 வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தனது ஒன்பதாவது வார்டு பகுதியில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பகுதி கூட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில் இன்று 2வது நாளாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் 11 வார்டுகளில் பகுதி சபை கூட்டங்கள் நடைபெறும் எனவும் அதற்கான வார்டுகள் அறிவிக்கப்பட்டு நடைபெற்றது.

இன்று மூன்றாவது நாளாக 13 வார்டு பகுதிகளில் நடைபெற்றது. 41 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சிந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஊழியர் , தூய்மை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 13 நபர்களே கலந்து கொண்டனர். இப்பகுதியில் உள்ள தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சிந்தன் அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர் என்பதால் ஒட்டுமொத்தமாக தவிர்த்து விட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் மாநகராட்சி கட்சி பேதம் இன்றி அனைத்து நல திட்டங்களையும் செய்து தர வேண்டும். 80 சதவீத வீட்டு வரி செலுத்திய நிலையில் இன்னும் அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் இதனை விரைவாக கவனத்தில் கொண்டு மாநகராட்சி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாமன்றத்தில் அதிக தி.மு.க. உறுப்பினரைக் கொண்டு பெரும்பான்மையுடன் இருப்பதால் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்தது ஆபத்தானது. இதில் கூறப்படும் குறைகள் அனைத்தும் மேயர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு முறைப்படி பதிவு செய்து செயல் திட்டங்கள் வகுக்க உள்ளதால் இனி வரும் காலங்களில் தங்கள் குறை மனுக்களை இக்கூட்டத்தில் அளிக்க வேண்டும் என பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Nov 2022 11:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?