/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 மையங்களில் 8வது மெகா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8வது தடுப்பூசி முகாம் துவங்கியது. மாவட்டம் முழுவதும் 500 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 மையங்களில் 8வது மெகா தடுப்பூசி முகாம்
X

தடுப்பூசி முகாம் (கோப்பு படம் )

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் இருவகையான தடுப்பூசிகளை சிறப்பு தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றனர். வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இன்று 8வது தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடைபெறுகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு காலை 7 மணிக்கு துவங்கியது.

இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியினை7,02,310 நபர்களும், இரண்டாவது தவணையை 2 லட்சத்து 70 ஆயிரத்து 156 நபர்களும் செலுத்தி கொண்டுள்ளனர்.

இதுவரை தடுப்பூசியை சேர்த்துக் கொள்ளாத ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 503 நபர்களை கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்பு முகாம் மற்றும் வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனாவை விரட்ட தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதம் எனத் தெரிவித்தார்.

Updated On: 14 Nov 2021 2:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  4. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  6. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  8. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  9. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  10. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா