வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்

வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
X

Tirupur News- முத்தூா் பிரிவு சாலையில் செயல்படாமல் உள்ள சிக்னல்.

Tirupur News-வெள்ளக்கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் தற்போது வரை செயல்படாமல் காட்சிப் பொருளாக இருக்கிறது.

Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் தற்போதுவரை செயல்படாமல் உள்ளது.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் நகா் வழியே நாகப்பட்டினம் - கூடலூா் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியே கரூா், திருச்சி, தஞ்சாவூா், ஈரோடு, கொடுமுடி, திருப்பூா், கோவை, உதகை, மூலனூா், தாராபுரம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இதனால், நாள்தோறும் ஏராளமான அரசு, தனியாா் பேருந்துகள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை இந்த சாலை வழியே சென்று வருகின்றன. இவை தவிர வெள்ளக்கோவில் பகுதியில் நூற்றுக்கணக்கான நூற்பாலைகள், விசைத்தறிக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இதனால், இந்த சாலையில் சராசரியாக ஒரு நிமிஷத்துக்கு 70 வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வளவு நெரிசல் மிகுந்த இந்த சாலையின் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நகரின் மையப் பகுதியான முத்தூா் பிரிவு நான்கு சாலை சந்திப்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிக்னல் அமைக்கப்பட்டது.

சுமாா் ஒரு ஆண்டு மட்டுமே சிக்னல் முறையாக செயல்பட்டது. அதன்பின், தற்போது வரை செயல்படவில்லை.

இதனால், வாகனங்கள் தாறுமாறக செல்வதுடன், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்வோா் நாள்தோறும் அவதியடைந்து வருகின்றனா்.

மேலும், விபத்துகளுக்கும் பஞ்சம் இல்லாமல் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே, போக்குவரத்து சிக்னலை முறையாக செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்