/* */

கஞ்சா வைத்திருந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள் 3 பேர் கைது

காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் சார்பில் கடந்த வாரம் குற்றம் மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து பொதுமக்களுடனான ஆலோசனைக் கூட்டம் எஸ்.பி தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

கஞ்சா வைத்திருந்த கல்லூரி,  பள்ளி மாணவர்கள் 3 பேர் கைது
X

காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையம் ( பைல் படம்)

தமிழகத்தில் கொரோனா காலத்திற்குப் பிறகு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அனைத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

பெரும்பாலான தொழிற்சாலைகளில் பணிய இழப்பு மற்றும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என அனைத்தும் இருந்த நிலையில் இவர்களின் மனமாற்றம் பெருமளவில் சீரழிவை நோக்கி சென்றது.

ஒரு காலகட்டத்தில் கஞ்சா என்பது பெரும் குற்ற செயலாக இருந்தது. ஆனால் தற்போது நாளடைவில் மெல்ல மெல்ல அருகிலுள்ள பல மாநிலங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் ஊடுருவி தற்போது எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக கஞ்சா உள்ளது.

காவல்துறை பல்வேறு நிலைகளில் இதனை கட்டுப்படுத்த சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தி தடுத்தாலும் ஆண்கள் பெண்கள் என விற்ற நிலை மாறி தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்து இந்த விற்பனையை சமூக விரோத குழு பயன்படுத்தி வருகிறது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதனைப் புகைப்பில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதும், பொதுமக்களை அச்சுறுத்துவதும், பொது போக்குவரத்தில் ஏற்படுவதும் என பல தீய செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை கஞ்சா 2.0 எனும் திட்டத்தின் கீழ் சிறப்புக்குழுக்கள் அமைத்து கஞ்சா விற்பனையை தடை செய்ய பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் பல கல்லூரிகள் உள்ள நிலையில் இப்பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து தொடர் புகார்கள் வந்தது. இதனை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கடந்த வாரம் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையம் சார்பில் குற்றம் மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உடனான ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளரான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், கஞ்சா என்ற போதை பொருள் மெல்ல மெல்ல தற்போது ஊடுருவி வருகிறதாகவும் , இதனைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை எனவும், பள்ளி கல்லூரி அளவில் இது பரவி உள்ளதால் அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் விற்பனை செய்வது குறித்து தகவல்கள் இருந்தால் காவல்துறைக்கு அளிக்க வேண்டும் எனவும் இது முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதனைத்தொடர்ந்து காஞ்சி தாலுகா காவல்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அவ்வப்போது காவல் எல்லைக்குள் வாகன சோதனை மற்றும் ரோந்து சோதனைகளை மேற்கொண்டு வந்ததில் , புஞ்சைஅரசன்தாங்கல் பகுதியில் சந்தேகப்படும் கல்லூரி மாணவர்கள் உள்ளதாக வந்த தகவலை எடுத்து அப்பகுதியில் விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் ஒருவர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் என்றும், இருவர் பள்ளி மாணவர்கள் எனவும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களை ஆய்வு செய்த போது அவர்களிடமிருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சாவை தாலுகா காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Updated On: 13 Feb 2023 2:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  9. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  10. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்