/* */

காஞ்சிபுரம் : அனைத்து வங்கிகளின் சார்பில் 1834 பயனாளிகளுக்கு 113 கோடி கடன் உதவி

காஞ்சிபுரத்தில் அனைத்து முன்னோடி வங்கிகள் மூலம் 1834 பயனாளிகளுக்கு ரூ 131 கோடி கடன் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : அனைத்து வங்கிகளின் சார்பில் 1834 பயனாளிகளுக்கு 113 கோடி கடன் உதவி
X

 பயனாளிகளுக்கு வீட்டு கடன் , கல்வி கடன் , மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிய மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் கடன் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் பல்லவன் நகரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி தலைமை வகித்தார். இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டல மேலாளர் ஸ்ரீமதி முன்னிலை வகித்தார்.

அனைத்து வங்கிகளும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை இந்தியன் வங்கியின் பொது மேலாளர் ஜி ராஜேஸ்வரரெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இம்முகாமில் 20 வங்கிகள் மற்றும் 5 அரசு அலுவலகங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கடனுதவிகள் பற்றி விரிவாக விளக்கி கூறினார்கள்.

இந்நிகழ்வில் 1834 பயனாளிகளுக்கு 113 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வழங்கினார். விழாவில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா துணை பொது மேலாளர் ஆஷித்ரஞ்சன் சின்கா, பேங்க் ஆப் பரோடா உதவி பொது மேலாளர் டிஎம் பதான், கனரா வங்கி உதவி பொது மேலாளர் ஜே சிவகுமார் உள்பட பல்வேறு வங்கிகளின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் சண்முகராஜ் செய்திருந்தார்.

Updated On: 28 Oct 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்