/* */

நாளை 10ம் வகுப்பு பாெதுத்தேர்வு: காஞ்சிபுரத்தில் 15,864 மாணவர்கள் எழுதுகிறார்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 864 மாணவ மாணவிகள், 61 தேர்வு மையங்களில் நாளை தேர்வு எழுதவுள்ளனர்.

HIGHLIGHTS

நாளை 10ம் வகுப்பு பாெதுத்தேர்வு: காஞ்சிபுரத்தில் 15,864 மாணவர்கள் எழுதுகிறார்கள்
X

அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் ( பைல் படம்)

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் அரசு தேர்வுகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. முதலாவதாக பிளஸ் டூ அரசு தேர்வு இன்று காலை 10 மணிக்கு துவங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 518 மாணவ, மாணவிகள் 50 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். அதனைத் தொடர்ந்து நாளை பத்தாம் வகுப்பு அரசு தேர்வுகள் தொடங்குகின்றன. நாளை தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ஆயிரத்து 112 மாணவர்களும், 7 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக 61 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

61 தேர்வு மையங்களுங்கும் ஒரு முதன்மை கண்காணிப்பாளர் பணியில் இருப்பார். இதைத் தவிர 61 துறை அலுவலர்களும் இவர்களுக்கு உறுதுணையாக தேர்வுப் பணிகளை கவனிப்பர். மாணவர்கள் தேர்வுகளில் முறைகேடாக ஈடுபட வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளை கண்காணிக்க 80 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர் கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத் துறைக்கு பள்ளிக்கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Updated On: 5 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  3. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  4. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  6. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  7. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  8. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  9. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  10. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!