/* */

தெருவில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருநாவலூர் அருகே கிழக்கு மருதூர் தெருவில் தேங்கிய நீரால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

தெருவில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X

கிழக்கு மருதூர் 5வார்டு தெருவில் தேங்கிய மழைநீர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியம், கிழக்கு மருதூர் 5வது வார்டில் உள்ள தெருவில் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மழைகாலங்களில் தேங்கும் தண்ணீரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பெய்த மழையால் தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அங்கு வசிப்பவர்கள் கடந்து செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தெருவில் வசிப்பவர்கள் கூறுகையில், எங்கள் தெருவில் இருப்பவர்கள் சுமார் 4 வருடங்களாக இந்த வழியாக செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதனை ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. எனவே இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.

நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், 5 வார்டில் உள்ள மக்கள் அனைவரும் வரும் 4.10.2021 அன்று ஓட்டு போட செல்லமாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 24 Sep 2021 10:09 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!