/* */

தாட்கோ மூலம் கடன்களை பெற்று சிறந்த தொழில் முனைவோராக உருவாக கலெக்டர் வேண்டுகோள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ மூலம் வங்கி கடன்களை பெற்று சிறந்த தொழில் முனைவோராக உருவாக கலெக்டர் ஶ்ரீதர் கூறினார்

HIGHLIGHTS

தாட்கோ மூலம் கடன்களை பெற்று சிறந்த தொழில் முனைவோராக உருவாக கலெக்டர் வேண்டுகோள்
X

தாட்கோ வங்கிக்கடனுக்கான நேர்காணலில் கலெக்டர் ஸ்ரீதர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறும் பயனாளிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் இன்று நேர்காணல் நடைபெற்றது.

இது குறித்து கலெக்டர் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 154 நபர்களுக்கு தொழில் முனைவோருக்கான கடன் வசதி, வாகன கடன்வசதி, சிறுதொழில் செய்ய கடன் வசதி கால்நடைகள் வளர்ப்பு தொழில் ஆகியவற்றுக்கான மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் வாயிலாக விண்ணப்பித்த பயனாளிகளுக்கு இன்று நேர்காணல் நடைபெற்றது.

விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் தொழில் குறித்து ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற தாட்கோ மூலம் பரிந்துரை செய்யப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடன்களை பெற்று சிறந்த தொழில் முனைவோராக உருவாகிட வேண்டும் .அதற்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

இந்த நேர்காணலில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், தாட்கோ மாவட்ட செயலாளர் குப்புசாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகன், உதவி திட்ட அலுவலர் கமலவள்ளி ,உதவி இயக்குனர் பெரியசாமி மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Sep 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  2. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  3. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  6. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  10. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை