/* */

கள்ளக்குறிச்சியில் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் பள்ளி வாகனங்களை இயக்கி, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு
X

கலெக்டர் ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி : பள்ளி வாகனங்களை இயக்கி, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி வளாகத்தில் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் நடந்த பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாமில் 76 பஸ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. வாகனங்கில் அவசர கால கதவு, முதலுதவி பெட்டகம், தீயணைப்பு கருவி, வாகனத்தின் தரைத்தளம், புவியிடங்காட்டி, கண்காணிப்பு கேமரா, பிரேக், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து வாகனத்தை இயக்கி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

வாகன ஓட்டுநர்களுக்கு அவசர காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பள்ளி வாகன ஆய்வு முகாம் நடந்தது. இதில் 32 வாகனங்கள் ஆய்வ செய்யப்பட்டது. டி.இ.ஓ., சிவராமன், ஆர்.டி.ஓ., சாய்வர்த்தினி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஜெயபாஸ்கரன், செந்துார்வேல், டி.எஸ்.பி.,க்கள் ராஜலட்சுமி, மணிமொழியன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கள்ளக்குறிச்சி செல்வம், உளுந்தூர்பேட்டை பெரியசாமி, உடனிருந்தனர்.

Updated On: 24 Nov 2021 12:14 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்