/* */

திண்டுக்கல்லில் பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி கிராம செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கொரனா பெருந்தொற்றில் 24 மணி நேரமும் பணியாற்றுவதால் மனஉலைச்சலுக்கு ஆளாகும் கிராம செவிலியர்கள்.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி கிராம செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
X

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம செவியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

இதனையடுத்து சங்கத்தின் தலைவர் பத்மாவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- எங்களுக்கு வாரவிடுமுறை வழங்க வேண்டும். எங்கள் பணிக்கான நேரம் காலை 8 முதல் 4 மணி வரை இருக்க வேண்டும். எங்களது பிரதான பணியான தாய் சேய் நல பணிகளை செய்ய முடியவில்லை. கொரனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணி 24 மணி நேரமும் நடைபெறுகிறது.

இரவு 10 மணி வரை பணியாற்றுகிறோம். தடுப்பூசி பெட்டிகளை நாங்கள் தான் எடுத்துச்செல்ல வேண்டும். திரும்பி கொண்டு வந்து கொடுக்க வேண்டும். எங்களது பணியில் ஸ்டாப் நர்சுகளை நியமிக்கிறார்கள். 24 மணி நேரமும் பணியாற்றுகிறோம். ஆனால் அவர்கள் பெயர் வாங்கிக்கொள்கிறார்கள். நர்சுகள் நியமனத்தால் எங்களது வேதனை அதிகரிக்கிறது,பணிச்சுமை அதிகரிக்கிறது.

வாரவிடுமுறையின் போது அரசு விழாக்களின் போதும் கூடுதலாக பணியாற்றச் சொல்கிறார்கள். திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எங்களது பணிகளை செய்வதற்கு நேரம் ஒதுக்கிட வேண்டும். எங்களது பணி நேரத்தை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என்று வரையறை செய்ய வேண்டும். நிர்வாகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

எந்த ஒரு நலத்திட்டம் கொண்டு வந்தாலும் அது எங்களின் பணிச்சுமையைத்தான் கூடுதலாக்குகிறது. திருவள்ளுவர் சொன்னது போல மயிலிறகே ஆனாலும் கூடுதல் சுமை ஏற்றினால் வண்டியின் அச்சாணி முறிந்துவிடும் என்பது போல எங்களின் கதை உள்ளது. இதனை தமிழக முதல்வரும் திண்டுக்கல் ஆட்சியரும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று பத்மாவதி கூறினார்.

Updated On: 14 Sep 2021 1:37 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  2. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  3. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  7. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  9. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  10. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு