/* */

இடிந்து விழும் அபாயத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை தாமதமின்றி அகற்ற வலியுறுத்தல்

இதுவரை அந்த கட்டிடங்களை இடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்துவது புரியாத புதிராக உள்ளது

HIGHLIGHTS

இடிந்து விழும் அபாயத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை தாமதமின்றி அகற்ற வலியுறுத்தல்
X

திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி பள்ளியில் சத்துணவு கூடம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தின் சுவரில் ஏற்பட்டுள்ள  நீண்ட விரிசல் 

திண்டுக்கல்லில், இடிந்து விழும் அபாயத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை தாமதமின்றி அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து ஆபத்தான நிலையில், உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு அரசு, தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்றும் பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது.

ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை எந்த கட்டிடங்களும் இடிக்கப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுக்கள், அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து கணக்கெடுத்துள்ளன.

ஆனால் இதுவரை அந்த கட்டிடங்களை இடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்துவது புரியாத புதிராக உள்ளது. திண்டுக்கல்லில் உள்ள பள்ளிகளிலேயே உடனடியாக அகற்றப்பட வேண்டிய கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன. திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி பள்ளியில் சத்துணவு கூடம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தின் சுவரில் நீண்ட விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

சத்துணவு வாங்குவதற்காக சமையல் கூடப்பகுதிக்கு மாணவர்கள் செல்லும் போது, அந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சுற்றி அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரின் ஒரு பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து செங்கல்கள் வெளியே தெரிகின்றன.எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள சுற்றுச்சுவர் இதுவரை அகற்றப்படவில்லை.

மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 22 Dec 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்