/* */

திண்டுக்கல்லில் செல்போன் கடை உரிமையாளரை கொலை செய்ய முயற்சி

திண்டுக்கல்லில் செல்போன் சர்வீஸ் கடை உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்; சம்பவ இடத்தில் எஸ் பி விசாரணை

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் செல்போன் கடை உரிமையாளரை கொலை செய்ய முயற்சி
X

மர்மநபர்களால் தாக்கப்பட்டு கிடக்கும் கடை உரிமையாளர்

திண்டுக்கல் பெரியகடைவீதி பகுதியை சேர்ந்தவர் மீரான் பாபு( வயது 35) இவர் அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார் . கடையில் இருந்து வேலை விஷயமாக சட்டாம்பிள்ளை தெரு பகுதியில் நடந்து வந்தபோது மர்ம கும்பல் ஒன்று அவரை வழி மறித்து அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மீரான் பாபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் . சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் போலீசார் வாலிபரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சி உதவியுடன் தேடி வருகின்றனர்,

கொலை முயற்சி சம்பவம் முன் விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் கொலை முயற்சி சம்பவம் நடந்தது திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 16 Sep 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு