/* */

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை .

வத்தலகுண்டு அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

HIGHLIGHTS

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை .
X

மனைவியை கொன்றதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஹபீப் ரஹ்மான்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் ராபியா (வயது 38). இவரது கணவர் ஹபீப் ரஹ்மான். இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார் இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு இருந்து வந்தது. கடந்த 5 .10 .2017 அன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த ஹபிப் ரஹ்மன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ராபியாவின் தலையில் அடித்து கொலை செய்தார்.

இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது வழக்கை விசாரித்த நீதிபதி புருசோத்தமன் மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கணவர் ஹபீப் ரகுமானுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Updated On: 15 Dec 2021 1:05 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  5. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  6. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  7. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  8. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  9. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  10. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...