/* */

திண்டுக்கல் கொலை விவகாரத்தில் 6 பேரை விடுவிக்க கோரி தர்ணா போராட்டம்

திண்டுக்கல்லில் நடந்த கொலை விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரை விடுவிக்க கோரி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் கொலை விவகாரத்தில் 6 பேரை விடுவிக்க கோரி தர்ணா போராட்டம்
X

திண்டுக்கல்லில் இளைஞர் படுகொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களில்  ஆறு பேரை விடுவிக்க கோரி தர்ணா போராட்டம் நடந்தது.

திண்டுக்கல் அருகே அனுமந்த நகர் பெரிய செட்டிகுளத்தில் கடந்த 03.01.2022 நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டு ராகேஷ் குமார் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில் அருள் கபிலன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி இரண்டு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர்.

துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக 4 பேர் கருதப்பட்ட நிலையில்,மீதமுள்ள 6 பேரை விடுவிக்கக்கோரி இன்று (10.01.2022)ஆறு பேரின் உறவினர்கள் கைக்குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றம் செய்தவர்களை கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் அவர்களை விடுவிக்கக் கோரியும் மனு எழுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்குவதற்காக வந்தபோது கொரோனா பெருந் தொற்று காரணமாக மனுக்களை அங்கு உள்ள புகார் பெட்டியில் போட்டு செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உரிய நடவடிக்கைகள் விசாரணையில் எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து மனுவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமானது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 10 Jan 2022 9:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  2. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  4. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  5. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  7. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  8. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...