செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர் அஞ்சலி
திருச்சியில் செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மறைவிற்கு திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு ஏஐடியுசி மாநில துணைத் தலைவருமான எம், செல்வராஜ் கடந்த இரு தினங்களுக்கு முன் உடல் நல குறைவினால் மரணம் அடைந்தார். இதையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு திருச்சியில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு திருச்சி மேற்குப் பகுதி இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொது செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான க. சுரேஷ், கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, துணைச் செயலாளர் செல்வகுமார், பொருளாளர் சண்முகம், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் எம்ஆர் முருகன், மேற்கு பகுதி துணைச் செயலாளர் க.முருகன், மேற்கு பகுதி பொருளாளர் ரவீந்திரன், மாணவர் பெருமன்ற மௌ.ஜெய்லானி , இளைஞர் பெருமன்ற விஷ்வநாத் ,. நாகராஜ் , மௌலானா மற்றும் பலரும் பங்கேற்று மறைந்த செல்வராசுவின் திருவுருவப்படத்திற்கு உறையூரில் அஞ்சலி செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu