சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சவுக்கு சங்கருக்கு  மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
X

கோர்ட்டில் அஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்.

கஸ்டடி முடிந்த நிலையில், சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் கடந்த நான்காம் தேதி தேனியில் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் மனு தாக்கல் செய்த நிலையில், நேற்றைய தினம் அதனை விசாரித்த கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு ஒருநாள் கஸ்டடி வழங்கி அனுமதி அளித்தார்.

சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திய பிறகு இன்று மாலையுடன் கஸ்டடி முடிந்த நிலையில், சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை 28ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார். இதனிடையே தனக்கு கை முறிந்துள்ளதால் தனியாக இருக்க முடியாது எனவும், தன்னை மெண்ட்டல் பிளாக்கில் இருந்து வேறு பிளாக்கிற்கு மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து அதனை மனுவாக அளிக்கும்படியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவிற்கு பரிந்துரை செய்வதாகவும் நீதிபதி பதிலளித்தார். பின்னர் சவுக்கு சங்கரை காவல் துறையினர் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Tags

Next Story