/* */

தருமபுரியில் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்

தருமபுரியில் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தருமபுரியில் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்
X

 தருமபுரி இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் அரவிந்த் குமார் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்

தருமபுரியில் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி மாந்தோப்பு பகுதியில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மகளிர் தினம், தூய்மை இந்தியா இயக்கம், நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம், பெண் குழந்தையை காப்போம் பெண் குழந்தையை கற்பிப்போம், பிரதமரின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், கோவிட் நோய்த்தடுப்பு, ஊட்டச்சத்து திட்டம், கேலோ இந்தியா திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துரை, கலந்துரையாடல், புகைப்பட கண்காட்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், தருமபுரி மாவட்ட திட்ட அலுவலர் வீ.ஜான்சிராணி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தருமபுரி இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் அரவிந்த் குமார் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்க்கு பரிசுகள் வழங்கினார்.

ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தி காவேரி, தருமபுரி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்ரீ. சுகந்தபிரியா, தமிழ்நாடு கிராம வங்கி நிதிசார் கல்வி ஆலோசகர் எம்.முருகன், மாவட்ட சுகாதார நல கல்வி அலுவலர் பா.ரங்கராஜன், விஐபி தொண்டு நிறுவனம் தலைவர் சரளா செந்தில்குமார், கள விளம்பர அலுவலர் பிபின் எஸ் நாத், கள விளம்பர உதவியாளர் சு.வீரமணி,இலக்கியம்பட்டி ஊராட்சி 7 வது வார்டு உறுப்பினர் அசோக்குமார் உள்ளிட்டோர் விளக்க உரை ஆற்றினார்.

மேலும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் வங்கி சார்ந்த பல்வேறு திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை அனைவரும் அறிந்து பயன்பெற வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசு போஷன் அபியன் என்னும் சிறந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவை குழந்தைகளுக்கு தவறாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் பொதுமக்களிடையே விவரிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக அனைவரும் துணி பைகளை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைவருக்கும் துணிப்பைகள் வழங்கப்பட்டது.

Updated On: 30 March 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!