/* */

தருமபுரி, தொப்பூர், அரூர், சித்தேரி சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை

தருமபுரி, தொப்பூர், அரூர், சித்தேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை.

HIGHLIGHTS

தருமபுரி, தொப்பூர், அரூர், சித்தேரி சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை
X

மழை (மாதிரி படம்)

தருமபுரி, தொப்பூர், அரூர், சித்தேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

தமிழகத்தில் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, குமரி தேனி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் அடுத்து மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்தே கோடை மழை தொடர்ந்து பெய்து வந்தது. இந்நிலையில் ஒரு வாரமாக மழையில்லாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று மாலை தருமபுரி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, தொப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து நேற்று இரவும் இரவு அரூர், கொளகம்பட்டி, சித்தேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் கடந்த ஒரு வாரமாக வெப்பம் வீசி வந்த நிலையில், இன்று பெய்த மழையால், வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 26 May 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  10. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...