/* */

தர்மபுரி அருகே கிராம ஒற்றுமைக்காக மக்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து கொண்டாட்டம்

தர்மபுரி அருகே கிராம ஒற்றுமைக்காக ஒன்று கூடி பொங்கல் வைத்து மாட்டுப் பொங்கலை கொண்டாடினர்.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே கிராம ஒற்றுமைக்காக மக்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து கொண்டாட்டம்
X

தர்மபுரி அருகே மாட்டுப் பொங்கலை கிராம ஒற்றுமைக்காக ஒன்று கூடி பொங்கல் வைத்து கொண்டாட்டம்.

பொங்கல் திருநாளில் இரண்டாம் நாளான மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நாட்டில் உள்ள விவசாயிகள் தாங்கள் உற்ற நண்பனாக கருதும் கால்நடைகளை தூய்மைப்படுத்தி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி புது கயிறு அணிந்து ஊர்வலமாக அழைத்துச் சென்று அதை பூஜைகள் செய்து வணங்கி வருகின்றனர்.

மாட்டு பொங்கல் தினம் என்பதால், தருமபுரி மாவட்டம் புது பட்டி கிராமத்தில் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி, விநாயகர் கோயில் அருகில் ஒரே இடத்தில் வரிசையாக அடுப்பு வைத்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். அதற்கு பின் தங்கள் விவசாய தொழிலுக்கு உற்ற நண்பனாக விளங்கும் கால்நடைகளை சுத்தப்படுத்தி, அலங்கரித்து பொங்கல் வைத்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி, பொழியோ பொழி என கூறிக் கொண்டு, கால்நடைகளை சுற்றி வலம் வந்து பூஜித்து வணங்கினர்.

தொடர்ந்து படைத்த பொங்கலை கால்நடைகளுக்கு ஊட்டி, கால்நடைகள் மற்றும் பொங்கல் பானைகளுடன் மக்கள் ஊர்வலமாக ஆட்டம் பாட்டத்துடன் சென்று பொங்கலை வெகு விமர்சியாக கொண்டாடினர்.

இந்த பொங்கல் திருவிழா மக்களின் ஒற்றுமைக்காகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும், புதுப்பட்டி கிராம மக்கள் வினோதமாக அனைவரும் ஒன்றுகூடி, பல ஆண்டைகளாக ஒரே இடத்தில் பொங்கல் வைத்து வழிபாட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மாட்டு பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Updated On: 16 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்