/* */

தொடங்காத கட்டிடப்பணி: எம்எல்ஏ ஆய்வுக்கு பிறகாவது விமோசனம் கிடைக்குமா?

ரூ.2கோடி ஒதுக்கியும், கட்டப்படாத சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் அலுவலக கட்டுமானத்தை, எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தொடங்காத கட்டிடப்பணி: எம்எல்ஏ ஆய்வுக்கு பிறகாவது விமோசனம் கிடைக்குமா?
X

தர்மபுரியில், ரூ.2கோடி ஒதுக்கியும்  கட்டபடாத சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் அலுவலக கட்டுமானத்தை ஆய்வு செய்த  எம் எல் ஏ வெங்கடேஸ்வரன்.

தருமபுரி சுற்றுலா மாளிகை அருகில், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் புதியதாக கட்ட 2017 - 18 ஆம் நிதியாண்டில் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு ஆணை வழங்கப்பட்டது. அப்போதைய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ், இப்பணியை விரைந்து நிறைவேற்ற அரசிடம் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவை நேரில் சந்தித்து, அடித்தளம் அமைத்து கிடப்பில் போடப்பட்டுள்ள இப்பணி குறித்து தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் விளக்கி இருந்தார். அமைச்சரும், உடனே அதிகாரிகளை அழைத்து உடனடியாக பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

அடித்தளம் அமைத்து கிடப்பில் போடப்பட்டுள்ள இப்பணியை, மீண்டும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாமிநாதனுடன், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணியின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, தருமபுரி நகராட்சி, வார்டு எண் 9, வட்டார வளர்ச்சி காலனியில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் மினி டேங்க் அகற்றப்படுவதாக பொதுமக்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையில் நேரில் சென்று பார்வையிட்டார். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

அவருடன், மாநில இளைஞர் சங்க செயலாளர் மு.முருகசாமி, மாவட்ட செயலாளர் பெ.பெரியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் ப. சண்முகம், பசுமை தாயகம் மாநில துணைச்செயலாளர் க.மாது, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் தகடூர் தமிழன், நகர செயலாளர்கள் - சத்தியமூர்த்தி, வெங்கடேசன், நகர அமைப்பு செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Oct 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  6. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  7. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  9. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?