/* */

சுதந்திர தின சைக்கிள் பேரணி: எஸ்.பி. கலைச்செல்வன் துவக்கி வைப்பு

தர்மபுரியில் இருந்து புறப்பட்டு செல்லும் சி.ஆர்.பி.எப். வீரர்களின் சுதந்திர தின சைக்கிள் பேரணியை எஸ்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சுதந்திர தின சைக்கிள் பேரணி: எஸ்.பி. கலைச்செல்வன் துவக்கி வைப்பு
X

தர்மபுரியில் இருந்து புறப்பட்டு செல்லும் சி.ஆர்.பி.எப். வீரர்களின் சுதந்திர தின சைக்கிள் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் 'ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ்' என்ற தலைப்பில் மத்திய பாதுகாப்புப் படை (சி.ஆர்.பி.எப்) சார்பில் 15 வீரர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நேற்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலிருந்து 22.08.2021 அன்று டெல்லிக்கு புறப்பட்டது.

தமிழகத்தில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்கள் வாழ்ந்த திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக சைக்கிள் பேரணி கர்நாடகா செல்கிறது. அங்கிருந்து ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் வழியாக 2,850 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து 15 வீரர்களும் காந்தி ஜெயந்தி தினமான அக்.2-ம் தேதி டெல்லி ராஜ்காட்டை சென்றடைகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலிருந்து டெல்லியை நோக்கி தொடங்கிய இப்பேரணியானது நேற்று (30.08.2021) பிற்பகலில் தருமபுரி மாவட்டத்திற்கு வந்தடைந்தது. இதனையொட்டி இச்சைக்கிள் பேரணியினை வரவேற்கும் நிகழ்ச்சி தருமபுரி, பென்னாகரம் சாலையில் உள்ள விஜய்‌ வித்யாலயா பள்ளியில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு சைக்கிள் பேரணியினை வரவேற்றார். மேலும் சைக்கிள் பேரணியை கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தி வரவேற்றனர்.அதேபோன்று சைக்கிள் பேரணி இன்று காலை தர்மபுரியில் இருந்து புறப்பட்டது இதனை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் வீரர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Updated On: 31 Aug 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!