/* */

திமுக மீது அவதூறு பரப்பும் பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி.யிடம் புகார்

திமுகவினர் மீது அவதூறு பரப்பும் பாமக வினர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி.யிடம் புகார்

HIGHLIGHTS

திமுக மீது அவதூறு பரப்பும் பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி.யிடம் புகார்
X

திமுகவினர் மீது அவதூறு பரப்பும் பாமக வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக சார்பில் எஸ்.பி.யிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றித்திற்க்குட்பட்ட கேத்துரெட்டிப்பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இப் பள்ளியில் 181 மாணவ,மாணவிகள் படிக்கின்றனர். இந்த மாணவர்களின் நலன் கருதி, கடந்த 2018-19 ஆம் ஆண்டு பா.ம.க மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மூன்று இலட்சம் ரூபாய் மதிப்பில், 55 மீட்டர் அளவிற்கு அரசு உயர் நிலைப் பள்ளிக்கு சுற்று சுவர் கட்டும் பணி கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பணியை பாமகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சம்பத் செய் து வருகிறார்.இந்த பணி தரமற்ற முறையில் கட்டப்பட்டுவருவதாக அக்கிராம மக்கள் உள்ளிட்ட திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர் ‌.

இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் மர்மநபர்கள் அச்சுவற்றை சில இடங்களில் இடித்து தள்ளியுள்ளார்கள். தரமற்ற முறையில் கட்டியதை பாமகவினர் சிலர் இரவோடு இரவாக இடித்து தள்ளிவிட்டு, அதனை திமுகவினர் மீது பழி போட்டு சமுக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர்.இவ்வாறு செய்த பாமகவினர் மீதும்,கேத்துரெட்டிப்பட்டிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா அவரது கணவர் சம்பத், ஒன்றிய கவுன்சிலர் கோபுரம் அவரது கணவர் கோவிந்தசாமி உள்ளிட்ட பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாரி, திமுக கிளை செயலாளர் நகுலன் உள்ளிட்டோர் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் புகார் மனு அளித்தனர்.

Updated On: 9 Feb 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்