/* */

சேதமடைந்த பஸ் நிலைய சாலை -சீரமைக்கக்கோரி தர்மபுரி கலெக்டரிடம் மனு

தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று, கலெக்டரிடம் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

HIGHLIGHTS

சேதமடைந்த பஸ் நிலைய சாலை -சீரமைக்கக்கோரி தர்மபுரி கலெக்டரிடம் மனு
X

கோப்பு படம் 

தர்மபுரி மாவட்ட பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்திற்கு தினமும் 750 அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. ஏற்கனவே இந்த பஸ் நிலையம் ஆங்காங்கே குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு உபயோகமற்ற நிலையில் இருந்தது.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், மேலும் இந்த சாலை சேதமடைந்துள்ளது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பஸ்களில் ஏறி இறங்கும் பயணிகளுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பஸ்களை இயக்குவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. அடிக்கடி பஸ்கள் பழுது ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

டீசல் விலை உயர்வு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பஸ்களை இயக்க முடியாத நிலையில் உள்ளோம். மேலும் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. எனவே தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் பஸ்களை முறையாக இயக்கும் வகையில் சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 24 Nov 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்