/* */

அண்ணா பதக்கம் பெற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

அண்ணா பதக்கம் பெற தகுதி வாய்ந்தவர்கள் ஙவிண்ணப்பிக்கலாம் கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அண்ணா பதக்கம் பெற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
X

தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள தகுதியானவர்களிடமிருந்து பேரறிஞர் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் உயரிய விருதான பேரறிஞர் அண்ணா பதக்கம் வரும் குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ளது. உயிர்களை காப்பாற்றுவதற்காகவும் மற்றும் சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவும் தன்னலமற்ற வகையில் துணிச்சலுடன் வீர தீர செயல்கள் புரிந்த அரசுத்துறையில் பணிபுரிபவர்களுக்காக இவ்விருது வழங்கப்படவுள்ளது.

நமது விளையாட்டு துறையில் உயிர்களை காப்பற்றுவதற்காக தன்னலமற்ற வகையில் வீர தீர செயல்கள் புரிந்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் மற்றும் விருது தொடர்பான விவரங்களை https.//awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 07.12.2021 அன்றுக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், அப்பாவு நகர், தர்மபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். எனவே தர்மபுரி மாவட்டத்திலுள்ள தகுதியுள்ளவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Dec 2021 5:02 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  2. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  3. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  7. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  8. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  9. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  10. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!