/* */

தி.மு.க. வெற்றி பற்றி அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பேட்டி

நகர்ப்புற தேர்தலில் பெற்ற வெற்றி முதல் அமைச்சரின் 9 மாத உழைப்பிற்கு கிடைத்த பரிசு என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறினார்.

HIGHLIGHTS

தி.மு.க. வெற்றி பற்றி அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பேட்டி
X

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேட்டி அளித்தார்.

கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, 14 பேரூராட்சி என தி.மு.க. அனைத்தையும் கைப்பற்றிய நிலையில் கடலூர் தி.மு.க. அலுவலகத்தில் மாநகராட்சி சார்பில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மாமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என அறிவுரை கூறிய அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தர்மபுரி மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில். அவர் கூறுகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட தி.மு.க. கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் ஆனால் தற்போது நகராட்சி மற்றும் பேரூராட்சி அனைத்தையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது என்றார்.

அதற்கு காரணம் தமிழக முதல்வரின் 9 மாத ஓய்வில்லாத உழைப்பு தான் என தெரிவித்த அவர் தர்மபுரி மாவட்டத்திற்கு என எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளதாகவும் அதன் காரணமாக அவர் மீது உள்ள நம்பிக்கையில் பொதுமக்கள் தற்போது முழு அளவில் வெற்றியைக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல் பத்தாண்டு காலம் கடலூர் மாவட்டத்தில் அமைச்சராக இருந்த தொழில்துறை அமைச்சர் எதுவும் செய்யாத நிலையில் பல்வேறு தொழிற்சாலைகள் கடலூர் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கையிலும் கடலூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மீது உள்ள நம்பிக்கையில் பொதுமக்கள் வாய்ப்பு அளித்துள்ளதாகவும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொது மக்களுக்கு அனைத்து திட்டங்களும் கொண்டுவருவதற்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.

Updated On: 23 Feb 2022 1:19 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!