/* */

அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்குன்றத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளூர் மாவட்ட ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி துணை திட்ட மேலாளர் உதயகுமார் தலைமையில் நடை பெற்றது.லதா அனைவரையும் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக செங்குன்றம் சரக உதவி ஆய்வாளர் தங்கதுரை மற்றும் புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்வி ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர். பின்னர் சுமார் 800-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் கலைகுழுவினர்கள் மூலம் போதை பொருள் பயன்படுத்துவதின் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் கலைகுழுவினர்கள் செல்வம், குணசேகர், செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் குமாரிஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.முடிவில் ராணி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Updated On: 21 Aug 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    குழந்தைகள் உண்மையில் யாரை நம்புகிறார்கள்? அதிர வைக்கும் ஆய்வு...
  2. தொழில்நுட்பம்
    வேற லெவல் டெக்னாலஜி! ஆண் தாவரத்திற்கு ஜோடி தேடும் ஆர்டிபிசியல்...
  3. வீடியோ
    🔴LIVE : 11 மணிநேர நீண்ட தியானத்தின் இரண்டாம் பகுதியை தொடங்கினார் பாரத...
  4. தொழில்நுட்பம்
    வரப்போகிறது சாட்டிலைட் இணையதள சேவை..!
  5. வால்பாறை
    கோட்டூரில் தார் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்..!
  6. தமிழ்நாடு
    ஒரே நபரும் உயிரிழந்தார் : ஆளில்லா கிராமமானது மீனாட்சிபுரம்..!
  7. வீடியோ
    🔴LIVE :NEET தேர்வு அவசியமா ? Vani Bhojan பரபரப்பு பதில் ! |#neet...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு: ஒருவர் கைது