/* */

தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

மறைமலை நகரில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது
X

இருசக்கர வாகன திருட்டில் கைது செய்யப்பட்ட பிரதாப், நந்தகுமார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக தொடர் புகார்கள் வந்த நிலையில், போலீசார் இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு காட்டாங்குளத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு மறைமலை நகர் போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரை பார்த்து பயந்த அந்த இளைஞர்கள் வாகனத்தை திருப்பி தப்ப ஓட முயற்சித்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் இருவரை பிடித்த நிலையில் ஒருவர் தப்பி ஓடினான்.

பிடிப்பட்ட இரண்டு இளைஞ்ர்களை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட போது அவர்களின் பெயர் பிரதாப்( 20) நந்தகுமார்(21) என்பதும், பல வாரங்களாக நோட்டமிட்டு இதுபோன்ற விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடுவதாக பிடிபட்ட 2 இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த 18 இருசக்கர வாகனத்தை போலீசார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 10 Aug 2021 9:10 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்