/* */

செங்கல்பட்டு பகுதியில் விடிய விடிய பெய்த மழை, குளிர்ந்த சூழல் நிலவுகிறது

செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவுகிறது

HIGHLIGHTS

செங்கல்பட்டு பகுதியில் விடிய விடிய பெய்த மழை, குளிர்ந்த சூழல் நிலவுகிறது
X

செங்கல்பட்டில் விடிய, விடிய பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் ,உள் மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழையானது பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவில் இருந்தே செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மிதமான முதல் கனமழை பெய்தது.

குறிப்பாக மதுராந்தகம், வண்டலூர், தாம்பரம், உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதன்படி, பல்லாவரம்,செங்கல்பட்டு, செய்யூர், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

மேலும் ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில் மழை பெய்ததன் காரணமாக நகரின் சில பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் நகரின் பல பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு தற்போது குளிர்ந்த சூழ்நிலையே நிலவி வருகிறது.

Updated On: 15 July 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  6. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  7. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  8. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  9. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  10. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!