/* */

புறநகர் ரயிலில் இன்று முதல் பொது மக்களுக்கு அனுமதி, மகிழ்ச்சியுடன் பயணம்

புறநகர் ரயிலில் இன்று முதல் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று தென்னக ரயில்வே அனுமதி வழங்கியது. காலை முதல் மக்கள் மகிழ்ச்சியாக ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

புறநகர் ரயிலில் இன்று முதல் பொது மக்களுக்கு அனுமதி, மகிழ்ச்சியுடன் பயணம்
X

புறநகர் ரயிலில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் இன்று காலை மகிழ்ச்சியுடன் பயணம் செய்ய தயாரான பொதுமக்கள்.

இன்று முதல் புறநகர் ரயில்களில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணிக்கலாம் எனத் தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து காலை முதல் ஆர்வத்துடன் பயணிகள் தங்கள் பயணத்தை துவக்கியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துவருவதால், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.இதனிடையே, கடந்த 7-ம் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார ரயில் சேவையின் எண்ணிக்கை 279 ஆக அதிகரிக்கப்பட்டது. பின்னர், 14-ம் தேதி முதல் இந்த எண்ணிக்கை 323 ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை புறநகர் ரயில்களில் மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதி இருந்தது. இன்று முதல் பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றிப் பயணிக்கலாம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொலைதூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒருவழிப் பயணம் மட்டுமே மேற்கொள்வதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பெண்கள், பெண்களுடன் பயணிக்கக்கூடிய 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் எனவும், ஆண்கள் 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் முக்கிய நேரத்தைத் தவிர்த்து அதாவது காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும்,

பின்னர் இரவு 7 மணி முதல் கடைசி நேரம் வரையிலும் பயணிக்கலாம் என்றும், ரயில்கள் இயக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் பயணிகள் ஆர்வத்துடனுன் மகிழ்ச்சியுடனும் இரயில்களில் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 25 Jun 2021 2:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  2. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  3. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  7. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  9. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  10. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு