/* */

செங்கல்பட்டில் அம்பேத்கர் சேனா அமைப்பின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

செங்கல்பட்டில் அம்பேத்கர் சேனா அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் அம்பேத்கர் சேனா அமைப்பின்  நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
X

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அம்பேத்கர் சேனா அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள நகுலன் முனுசாமி நினைவு அரங்கத்தில் அம்பேத்கர் சேனா அமைப்பு சார்பில் மறைமலை அடிகளின் பிறந்தநாள் விழா, காமராஜரின் 119வது பிறந்தநாள்விழா, மற்றும் அம்பேத்கர் சேனா அமைப்பின் மாநில, மாவட்ட மற்றும் அறிமுக கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் துவக்கமாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அரசு மருத்துவக்கல்லூரி அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் வல்லம் பகுதியில் உள்ள நகுலன் முனுசாமி நினைவு அரங்கத்தில் அம்பேத்கர் சேனா அமைப்பின் அறிமுக கூட்டம், மாநில துணை செயலாளர் வி.டி சதீஷ் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி தலைவர் ராஜன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

பின்னர், "பெரியாரும்அம்பேத்கரும்" என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமண்ற வழக்கறிஞர் வல்லம் மு. சோமு உரையாடினார். "தமிழ்கூறும் நல் உலகு" என்ற தலைப்பில் மாநில அமைப்புச் செயலாளர் சட்டம் மு. முனீசுவரன் உரையாற்றினார். இருதியாக "கர்மவீரர்" என்ற தலைப்பில் வழக்கறிஞர் அணி மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் குன்றத்தூர் சுரேஷ் உரையாடினார்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை, செங்கல்பட்டு நகர செயலாளர் எம். லோகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Updated On: 17 July 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’