/* */

மிரட்டுகிறது மழை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 ஏரிகள் 100% நிரம்பின

செங்கல்பட்டு மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், 75 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.

HIGHLIGHTS

மிரட்டுகிறது மழை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 ஏரிகள் 100% நிரம்பின
X

கோப்பு படம் 

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காராணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில விவசாய பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.

தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளது இதில் 75 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன. 75 சதவீதத்துக்கு மேல் 72 ஏரிகளும், 50 சதவிகிதத்திற்கு மேல் 116 ஏரிகளும் 25 சதவீதத்திற்கு மேல் 184 ஏரிகளும், 25 சதவிகிதத்துக்கும் கீழ் 81 ஏரிகள் நிரம்பிவிட்டன. ஏரிகளின் நீர்வரத்தை கவனித்து வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்