/* */

தொழிற்சாலைகளில் கொரானா பரவும் அபாயம்: விடுப்பு வழங்க சிஐடியு வலியுறுத்தல்

சம்பளத்துடன்..

HIGHLIGHTS

தொழிற்சாலைகளில் கொரானா பரவும் அபாயம்:  விடுப்பு வழங்க சிஐடியு வலியுறுத்தல்
X

பொது முடக்க காலத்திலும் தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் கொரானாத் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஒரு மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என சிஐடியு செங்கல்பட்டு மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளா் க.பகத்சிங்தாஸ் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்குவது தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது .

சுமார் 200 பேர் முதல் 1000 பேர் வரை தொழிற்சாலையில் குவியலாக பணிபுரிவதும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தொற்றுக்கு உள்ளாகி வீடு திரும்பும் போது அவர்களின் குடும்பம் முழுவதும் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில இயங்கிருவம் போர்டு கார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 7000 கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் மேலும் இதன் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகளான யாசக்கி , ஜேபிஎம் , கூப்பர் ஸ்டாண்ட் , ஹனான் , காம்ஸ்டார் , லீயர் , பெருஷியா , விஸ்டியான் , மதர்ஸான் என 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

பணிபுரியும் தொழிலாளர்கள் தொற்றுக்கு உள்ளாகி அவர்கள் வீட்டுக்கு வரும்போது குடும்பம் முழுவதும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இந்த நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் சுமார் 300 தொழிற்சாலைகளில் 60 அயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பொது முடக்க காலத்தில் பணி செய்து வருவதால் இந்த நிறுவனங்களால் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்து. இதனால் ஒரு மாதகாலத்துக்கு சம்பளத்துடன் தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கவும், ஆலை செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

#CITU #coronaspread #கொரானா #அபாயம் #சிஐடியு #வலியுறுத்தல் #தொழிற்சாலை #சம்பளத்துடன். #விடுப்பு #Instanews #இன்ஸ்டாநியூஸ் #paid_leave #leave #salary #workers #covid19 #covid #staysafe #stayhome

Updated On: 13 May 2021 11:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  2. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  3. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  4. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  7. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  8. சுற்றுலா
    ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
  9. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  10. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...