/* */

செங்கல்பட்டில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் 20 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டில் அரசின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது, இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணைகளை இன்றே வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனை துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 300க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் என சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்துள்ளனர். மேலும் உயர் கல்வி, சுய வேலைவாய்ப்பு மற்றும் வங்கிக் கடன் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் அரங்குகள் அமைத்து வழிகாட்டினர். இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை நாடும் இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுய விபரக் குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர் என்று ஆட்சியர் கூறினார்.

Updated On: 30 Jan 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்