/* */

பள்ளி மாணவிகளிடையே சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு போட்டி

பள்ளி மாணவிகளிடையே சைபர் கிரைம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேச்சுப் போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

பள்ளி மாணவிகளிடையே சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு போட்டி
X
அரியலூர் மாவட்டத்தில் நடந்த சைபர் கிரைம் விழிப்புணர்வு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு  மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிசுகளை வழங்கினார்.

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி மாணவிகளிடையே சைபர் கிரைம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.

திருச்சி மண்டல் காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்திரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் அறிவுறித்தலின்படியும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டுதல்படியும், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில், அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சைபர் கிரைம் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச்சுபோட்டி நடத்தப்பட்டது.

காவல் ஆய்வாளர் ஞா. செங்குட்டுவன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) க.சிவநேசன் ஆகியோர் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு செய்தனர். மேலும் இணையதளத்தில் குற்றவாளிகள் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 155260 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிசுகளை வழங்கினார்.

Updated On: 30 Oct 2021 4:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...